அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார்

Posted On: 04 JAN 2025 8:45PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி அறிவியலுக்கான இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை, பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை  இணை அமைச்சர்  டாக்டர். ஜிதேந்திர சிங், தனது இல்லத்தில் பல்வேறு முன்னணி வெளியீடுகள் மற்றும் சேனல்களைச் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு மதிய உணவை வழங்கினார், அங்கு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முறைசாரா கருத்துக்களைப்  பரிமாறிக்கொண்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பல ஆண்டுகளாக, இதுபோன்ற ஊடக சந்திப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தி வருகிறார், இது புத்தாண்டில் முதல் முறையாக நடத்தப்பட்டது. அவரைப் பொறுத்தவரை, இது போன்ற ஒரு நிகழ்வு, பல்வேறு வகையான தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கொள்கை விஷயங்கள் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து தங்கள் உள்ளீடுகளை வழங்குவதன் மூலம், மதிய உணவு கூட்டத்தில் துடிப்பான கருத்து பரிமாற்றம் நடந்தது. கூட்டு முயற்சிகள் நிர்வாகத்தை மேம்படுத்தக்கூடிய பகுதிகள், பொது சேவை வழங்கல் மற்றும் வெற்றிக் கதைகள் பற்றிய பரந்த விழிப்புணர்வு பற்றி, அமைச்சர் கருத்து கேட்டார்.
விருந்தினர்களை வரவேற்று, டாக்டர் ஜிதேந்திரா சிங், "இன்று உங்கள் அனைவருடனும் பழகும் இந்த வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்களாக உங்கள் பங்கு முக்கியமானது. இது போன்ற முறைசாரா உரையாடல்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளவும், நமது பொதுவான தேசிய இலக்குகளை நோக்கி செயல்படவும் அவசியம்", என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2090242&reg=6&lang=11 

**************

BR/KV


(Release ID: 2090300) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Punjabi