வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தை விரைவுபடுத்த டிபிஐஐடு கூட்டு முயற்சி
Posted On:
04 JAN 2025 1:25PM by PIB Chennai
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், இந்திய ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அவர்களின் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தவும் ஒரு முன்னணி கடன் நிறுவனமான ஸ்ட்ரைடு வென்சர்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
வியூக வழிகாட்டுதல் மற்றும் சந்தை அணுகலுடன் நிதி ஆதரவை ஒருங்கிணைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த ஒத்துழைப்பு கருவியாக இருக்கும்.
இந்த ஒத்துழைப்பின் பொருளாதார தாக்கத்தை எடுத்துரைத்து, ஸ்டார்ட்அப் இந்தியாவின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், இந்த முயற்சிகள், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக புதுமை மற்றும் தொழில்முனைவை அதிகரிக்க இந்தியாவின் பரந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை நிச்சயமாக வலுப்படுத்தும் என்று கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஸ்ட்ரைட் வென்ச்சர்ஸ், அதிக வளர்ச்சி திறன் கொண்ட ஸ்டார்ட்அப்களை அடையாளம் கண்டு, நிதியுதவி, சந்தை அணுகல் மற்றும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு கொள்கை ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090093
***
PKV/KV
(Release ID: 2090118)
Visitor Counter : 30