அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் 71 -வது நிறுவன தினம்
Posted On:
03 JAN 2025 12:00PM by PIB Chennai
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் 71-வது நிறுவன தினத்தில் குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வடிவமைப்பு குறித்த யோசனையை வழங்கும் மையம் புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் தொடங்கப்பட்டன. தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் தற்போது மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல், தொழில் ஆராய்ச்சித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
அறிவியல் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளரும், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநனருமான டாக்டர் என்.கலைச்செல்வி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான வடிவமைப்பு மையத்தை(டிசைன் கிளினிக்) தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையம் புத்தொழில் நிறுவனங்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துறையினருக்குத் தேவையான வடிவமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089757
***
TS/SV/AG/KR
(Release ID: 2089826)
Visitor Counter : 24