சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
30 DEC 2024 4:53PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய, சமமான சமூகத்தை உருவாக்க மத்திய அரசு பல்வேறு தரப்பினருடன் இணைந்து ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டது. அணுகுமுறை, தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது முதல் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட முன்முயற்சிகள், வரும் ஆண்டுகளில் நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத்தரும். ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர்களின் முழு பங்கேற்பு, ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையைக் குறிக்கிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
அணுகக்கூடிய இந்தியா இயக்கத்தின் 9 ஆண்டுகள்:
அணுகக்கூடிய இந்தியா இயக்கத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் எளிமையான அணுகுமுறைகளை ஊக்குவிப்பதில் உள்ள ஒன்பது ஆண்டுகால முன்னேற்றங்களைக் குறிக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்த முன்னோடி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து, அவர்கள் கண்ணியம், சமத்துவம், வாய்ப்புகளுடன் வாழ வகை செய்கிறது.
அணுகக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்வி முதல் அதிகாரமளிப்பதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது வரை, இந்த இயக்கம் முன்னேற்றம், சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் குறித்த தரவுகள் கிளவுட் தொழில்நுட்பம் அடிப்படையில் தரப்படுகின்றன .கட்டணமில்லா தொலைபேசி எண் 1800222014 மூலம் 21 வகையான குறைபாடுகள் குறித்த தகவல்களை24 மணி நேரமும் பெறலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான உதவி தொலைபேசி இணைப்பு: மத்திய அரசால் பராமரிக்கப்படும், 14456 என்ற தொலைபேசி எண் பயனாளிகளுக்கு எளிதில் உபயோகிக்கும் வகையில் சிறு அளவிலான குறியீடுகளுடன் உள்ளது .
உடல் திறன் மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சி உள்கட்டமைப்புக்கான அணுகல் தரநிலைகளுக்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இது மத்திய அரசுடன் தொடர்புடைய பயிற்சி நிறுவனங்களால் உள்ளடக்கிய தரநிலைகளுடன் நாடு தழுவிய அளவில் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. உலகளாவிய வடிவமைப்பு கொள்கைகளை ஊக்குவிக்கும் குழு அணுகல் தணிக்கையாளர்கள், பொறியாளர்களுக்கான மேம்பட்ட பயிற்சித் திட்டங்களும் தொடங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088877
------
TS/SV/KPG/KR
(Release ID: 2089559)
Visitor Counter : 12