பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ-எம்டிஎல் இடையே 1,990 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
30 DEC 2024 4:50PM by PIB Chennai
இந்த நிதியாண்டில் இரண்டு ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2,867 கோடி ரூபாய் மதிப்பிலான டிஆர்டிஓ-ஏஐபி அமைப்புக்கான ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் (ஏஐபி) பிளக் கட்டுமானம், இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் அதன் ஒருங்கிணைப்பு, கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் மின்னணு கனரக டார்பிடோவை ஒருங்கிணைப்பதற்காக இந்த இரண்டு ஒப்பந்தங்களும் 2024 டிசம்பர் 30-ம் தேதி புதுதில்லியில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
ஏஐபி பிளக் கட்டுமானம், அதன் ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தம் மும்பையின் மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் சுமார் 1,990 கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்தானது. அதே நேரத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கும் இஎச்டபிள்யூடி-ஐ ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம் பிரான்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் சுமார் ரூ.877 கோடி ரூபாய் செலவில் கையெழுத்தானது.
ஏஐபி தொழில்நுட்பத்தை மத்திய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமானம், ஒருங்கிணைப்பு தொடர்பான திட்டம் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களின் திறனை மேம்படுத்துவதற்கான 'தற்சார்பு இந்தியா ' முயற்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கும். இத்திட்டம் மூன்று லட்சம் மனித வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இது இந்திய கடற்படையின் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் சுடுதிறன் திறன்களை பெரிதும் மேம்படுத்தும்.
*****
(Release ID: 2088874)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2089558)
आगंतुक पटल : 57