குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
01 JAN 2025 4:36PM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 6.30 கோடிக்கும் அதிகமான நிறுவனங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் ஆற்றல் வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோரை ஊக்குவித்து, குறைந்த மூலதன செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக. மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து, கதர், கிராமம், கயிறுத் தொழில்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சிகள், திட்டங்கள் கடன் ஆதரவு, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு, பயிற்சி, போட்டித்தன்மையை மேம்படுத்துதல், சந்தை உதவி போன்ற முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் விரிவான ஆதரவை வழங்குகின்றன.
2024-ம் ஆண்டு குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இதில் புதிய தொழில்களுக்கான முன்முயற்சிகள், பல்வேறு நிறுவனங்களுடனான இருதரப்பு ஒத்துழைப்புகள் பிற நாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் அந்த அமைச்சகத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. 2024-ம் ஆண்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சில முக்கிய முன்முயற்சிகள், சாதனைகள் பின்வருமாறு:
1. 2024-ம் ஆண்டில் முக்கிய முயற்சிகள் சாதனைகள்:
1.1 பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் (20.9.2024)
பிரதமர் திரு நரேந்திர மோடி 17.09.2023 அன்று பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 18 வகையான கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் (1 ஜனவரி2024 முதல் 30டிசம்பர்2024 வரை) பின்வருமாறு:-
- பதிவுகள்: இத்திட்டத்தின் கீழ் 24.77 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- திறன் மேம்பாடு: 15.05 லட்சம் பயனாளிகள் அடிப்படை திறன் மேம்பாட்டுப் பயிற்சியை முடித்துள்ளனர்.
- கடன் ஆதரவு: 2.54 லட்சம் பயனாளிகளுக்கு சலுகை வட்டி விகிதத்தில் பிணையம் இல்லாத கடன்களாக 2197.72 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் ஊக்கத்தொகை: 6.58 லட்சம் பயனாளிகளின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
- சந்தைப்படுத்தல் ஆதரவு: கைவினைஞர்கள், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 75 வர்த்தக கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, 20.09.2024 அன்று மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 18 வகையான பாரம்பரிய கைவினை கலைகளை பாதுகாக்கும் வகையில் இத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் கைவினைஞர்கள் தங்களது வர்த்தகங்களை விரிவுபடுத்துவதற்கும், உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும் வகையில், பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2089308
***
TS/SV/AG/DL
(Release ID: 2089400)
Visitor Counter : 62