பாதுகாப்பு அமைச்சகம்
ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்
Posted On:
01 JAN 2025 2:36PM by PIB Chennai
ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக இன்று அதாவது 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 01-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா 1986-ம் ஆண்டு டிசம்பர் 06 - தேதி இந்திய விமானப்படையின் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பெங்களூரில் உள்ள விமானப்படை விமானிப் பயிற்சி பள்ளி, அமெரிக்காவின் விமானப்படை பணியாளர் கல்லூரி, இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். பயிற்சி காலத்தில் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா 3000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப்படை விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.
38 ஆண்டுகளுக்கும் கூடுதலான தனது பணியில், ஏர் மார்ஷல் திரு ஜிதேந்திர மிஸ்ரா முக்கியமான படைப்பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். விமானப் படையின் படைப்பிரிவு அதிகாரியாகவும், விமானம், பயிற்சி அமைப்புகளில் தலைமை விமானியாகவும் பணியாற்றியுள்ளார்.
விமானப்படையின் சிறந்த சேவைக்கான 'அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும்' 'விஷிஷ்ட் சேவா பதக்கமும்' பெற்றுள்ளார். ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவையை வழங்கிய பின்னர் 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹாவுக்குப் பிறகு அவர் இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.
***
TS/SV/AG/KR/DL
(Release ID: 2089395)