வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்துறையின் நிலைத்தன்மை, மேம்பாட்டில் புகையிலை வாரியம் கவனம் செலுத்துகிறது; 2023-24-ம் நிதியாண்டில் ஏற்றுமதி 12,005 கோடி ரூபாயை எட்டியது

Posted On: 01 JAN 2025 11:53AM by PIB Chennai

புகையிலை  சார்ந்த கைத்தொழிலின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையிலான உத்திசார் நடவடிக்கைகளை புகையிலை வாரியம் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டுத்  தேவைகளையும் ஏற்றுமதி தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் வகையில், பயிர் செய்வதை திட்டமிடுதல், உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான புகையிலையை வழங்க ஏதுவாக அதனை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு இந்த வாரியம் உதவி செய்கிறது. புகையிலை சார்ந்த  கைத்தொழிலின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக "புகையிலை வாரிய சட்டம், 1975-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு 1976-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புகையிலை வாரியம் நிறுவப்பட்டது. வேளாண் நடைமுறைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யவும், புகையிலை  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான, லாபகரமான விலையை உறுதி செய்யவும்  புகையிலை ஏற்றுமதியை அதிகரிப்பதும் இந்த வாரியத்தின் முதன்மைப் பணிகளாகும். தரமான புகையிலை உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களுடன் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நிலையான புகையிலை சாகுபடி முறைகளை ஊக்குவிப்பதற்காக இந்த வாரியம் வேளாண் விரிவாக்கம், மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. சீனா, பிரேசில், ஜிம்பாப்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக எஃப்.சி.வி புகையிலை உற்பத்தியில் உலகில் இந்தியா 4வது பெரிய நாடாக திகழ்கிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089182

***

TS/SV/AG/KR

 


(Release ID: 2089272) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi