நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
"இந்த ஆண்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று, பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, இவை ஓராண்டு நீடிக்கும்": மனதின் குரல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி
Posted On:
30 DEC 2024 3:33PM by PIB Chennai
29.12.2024 அன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 117-வது பகுதியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, "இந்த ஆண்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று, பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவை ஓராண்டுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பாரம்பரியத்துடன் நாட்டின் குடிமக்களை இணைக்க constitution75.com என்ற சிறப்பு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நீங்கள் அரசியலமைப்பின் முகவுரையைப் படித்து, உங்கள் வீடியோவைப் பதிவேற்றலாம்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். "நீங்கள் அரசியலமைப்பை எண்ணற்ற மொழிகளில் படிக்கலாம்; அரசியல் சாசனம் தொடர்பான கேள்விகளையும் கேட்கலாம்" என்றார். மனதின் குரலின் நேயர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள் ஆகியோர் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு இதில் பங்கெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
***
TS/SV/RR/KR/DL
(Release ID: 2088913)
Visitor Counter : 29