பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை; பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
30 DEC 2024 1:00PM by PIB Chennai
வரும் காலங்களில் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவையாகும். மேலும் எதிர்கால சவால்களை சமாளிக்க ஏதுவாக ராணுவ வீரர்களை தயார்படுத்துவதில் ராணுவ பயிற்சி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்தியப் பிரதேச மாநிலம் மோவில் உள்ள ராணுவப் போர் பயிற்சிக் கல்லூரியில் (ஏ.டபிள்யூ.சி) அதிகாரிகளிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். போர் முறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், போர்முறை தொடர்பான தரவுகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போர்முறை, மின்-காந்தப் போர், விண்வெளிப் போர், சைபர் தாக்குதல்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான போர் முறைகள் இன்றைய காலங்களில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன என்று கூறினார் .
இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க ராணுவ வீரர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், ராணுவம் ஆயத்த நிலையில் இருப்பதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மோவில் உள்ள பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது என்று கூறினார். மாறிவரும் சூழலுக்குகேற்ப பயிற்சி பாடத்திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதற்கும், அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் வீரர்கள் தயார்படுத்தப்பட்டு வருவதற்கும் அவர்இ பாராட்டு தெரிவித்தார் .
***
TS/SV/RR/KR/DL
(Release ID: 2088906)
Visitor Counter : 26