அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2024-இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முக்கிய செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
24 DEC 2024 11:33AM by PIB Chennai
உலகளாவிய புத்தாக்க குறியீடு (ஜி.ஐ.ஐ) 2024 இன் படி உலக அளவில் சிறந்த புதுமையான பொருளாதாரங்களில் இந்தியா 39வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக அறிவுசார் சொத்து அமைப்பின் அறிக்கை 2023 இன் படி, உலகில் அறிவுசார் சொத்து தாக்கல் செய்வதில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. நெட்வொர்க் ரெடினெஸ் இன்டெக்ஸ் (என்.ஆர்.ஐ) 2024 அறிக்கையின்படி, இந்தியா தனது தரவரிசையை 79வது இடத்திலிருந்து (2019) 49வது இடத்திற்கு (2024) மேம்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள 133 பொருளாதாரங்களில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தாக்கம் குறித்த முன்னணி உலகளாவிய குறியீடுகளில் என்.ஆர்.ஐ ஒன்றாகும்.
ஏ.என்.ஆர்.எஃப் (அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை) ஏ.என்.ஆர். எஃப் சட்டம் 2023 மூலம் நிறுவப்பட்டது. இதன் விதிகள் பிப்ரவரி 5, 2024 முதல் நடைமுறைக்கு வந்தன. ஏ.என்.ஆர். எஃப் ஆனது, உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடைய இந்திய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் திறமைகளை வெளிக்கொணருவதற்கான இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஏ.என்.ஆர். எஃப் இன் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் 2024 ஆகஸ்ட் 22 அன்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே. சூட் தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு, செப்டம்பர் 10, 2024 அன்று அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை வாரியத்தின் முதல் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய அமைச்சரவை, தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு (என். கியு.எம்) ஒப்புதல் அளித்தது, எட்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.6003.65 கோடி செலவில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாட்டை வளர்ப்பது மற்றும் அளவிடுதல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் துடிப்பான மற்றும் புதுமையான சூழலியலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ் நான்கு கருப்பொருள் சார்ந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 17 திட்டக் குழுக்கள் அடங்கிய 14 தொழில்நுட்பக் குழுக்களைக் கொண்டுள்ளது. இந்த மையங்கள் 31 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், 8 ஆராய்ச்சி ஆய்வகங்கள், ஒரு பல்கலைக்கழகம் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் உட்பட 43 நிறுவனங்களில் இருந்து மொத்தம் 152 ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கின்றன. தொழில்நுட்ப மேம்பாடு, மனித வள மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, குவாண்டம் தொழில்நுட்பங்களின் வேகமாக வளர்ந்து வரும் துறையில் முன்னணியில் இருப்பதற்கான தேசத்தின் கூட்டு லட்சியத்தை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது.
தேசிய புவியியல் கொள்கை 2022 உடன் இணைந்த புவிசார் திறன் மேம்பாட்டு துணைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இடஞ்சார்ந்த சிந்தனைத் திட்டம் 7 மாநிலங்களை (குஜராத், ஹரியானா, ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் ராஜஸ்தான்) உள்ளடக்கியது, 4169 மாவட்டங்கள், 1169 பள்ளிகள், 154 ஆசிரியர்கள், 6205 மாணவர்களை சென்றடைந்தது.
இடைநிலை சைபர் இயல் அமைப்புமுறை தேசிய இயக்கம் (என்.எம்-ஐ.சி.பி.எஸ்), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்ள தொழில்நுட்ப தளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, தரவு பகுப்பாய்வு, விவசாயம் மற்றும் நீருக்கான தொழில்நுட்பங்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பகுதிகளில் மொத்தம் 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் (என்.எஸ்.எம்), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றால் கூட்டாக செயல்படுத்தப்பட்டு, 2023 வரை நாடு முழுவதும் 28 தளங்களில் 27 பீட்டா ஃபிளாப் கம்ப்யூட்டிங் திறனை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு என்.எஸ்.எம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ருத்ரா சேவையகத்தின் அடிப்படையில் ஐந்து சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளை இயக்கியுள்ளது. அவற்றில் மூன்று செப்டம்பர் 2024 இல் பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. புதுதில்லியின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் மையத்தில் உள்ள அமைப்பு அவற்றில் 3 பீட்டா ஃப்ளாப்பின் மொத்த கம்ப்யூட்டிங் சக்தியுடன் மிகப்பெரியது.
காலநிலை மாற்றம் குறித்த இரண்டு தேசிய இறக்கங்களை இத்துறை செயல்படுத்தி வருகிறது. அவை இமயமலை சுற்றுச்சூழலை நிலைநிறுத்துவதற்கான தேசிய இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான உத்திசார் அறிவுக்கான தேசிய இயக்கம்.இரண்டும் மனித மற்றும் நிறுவன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை உருவாக்குதல், உத்திசார் அறிவை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்ற அறிவியல், தாக்கங்கள் மற்றும் தழுவல் ஆகியவற்றின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087506
******
BR/KV
(रिलीज़ आईडी: 2088697)
आगंतुक पटल : 190