பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்

Posted On: 28 DEC 2024 4:20PM by PIB Chennai

 

 ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது.

இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது.  அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது.

ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும் சேவை வழங்குவதற்கான காலக்கெடு குறித்த அறிவிப்பு பலகை உள்ளது. தானியங்கி மேல்முறையீட்டு முறையை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காகவும், சேவை விண்ணப்பங்களை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கு வழிவகை செய்ததற்காகவும் ஹரியானாவின் முதன்மை ஆணையரை மத்திய அரசு செயலாளர் செயலாளர் பாராட்டினார்.

மத்திய குழு பிரதிநிதிகள் ஹரியானா முதலமைச்சரையும் சந்தித்தனர்.

***

PLM/KV


(Release ID: 2088603) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi