பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
கிராமப்புற இந்தியாவுக்கு அதிகாரமளித்தல் - ஸ்வமித்வாவின் புரட்சிகர தாக்கம்
57 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளை டிசம்பர் 27 அன்று பிரதமர் வழங்கவுள்ளார்
Posted On:
26 DEC 2024 1:49PM by PIB Chennai
2020, ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வமித்வா திட்டம், கிராம குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சொத்துரிமையாளர்களுக்கு "உரிமைகளின் பதிவு" வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நில எல்லையை வரையறுத்து வரைபடமாக்கலில்மேம்பட்ட ட்ரோன் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தத் திட்டம் சொத்தைப் பணமாக்குதலை ஊக்குவிக்கிறது, வங்கிக் கடன்களை அணுகுவதை எளிதாக்குகிறது, சொத்து தகராறுகளைக் குறைக்கிறது, கிராம அளவில் விரிவான திட்டமிடலை ஊக்குவிக்கிறது. உண்மையான கிராம சுயராஜ்யத்தை அடைவதற்கான ஒரு நடவடிக்கையாக, இந்த முன்முயற்சி கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கும் அதை தற்சார்பாக மாற்றுவதற்கும் கருவியாக உள்ளது!
தற்சார்பு இந்தியாவின் இந்த பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டாக, 2024, டிசம்பர் 27 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி 10 மாநிலங்கள் (சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்) மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்) உள்ள 46,351 கிராமங்களில் 57 லட்சம் ஸ்வமித்வா சொத்து அட்டைகளின் மின்னணு முறையிலான விநியோகத்தில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.நாடு முழுவதும் உள்ள பிரமுகர்கள் மெய்நிகர் முறையில் பங்கேற்கும் இந்த விழாவில் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
பல தசாப்தங்களாக, இந்தியாவில் கிராமப்புற நிலத்தின் கணக்கெடுப்பும் தகராறுகளுக்கு தீர்வு காண்பதும் முழுமையடையாமல் இருந்தது. பல மாநிலங்கள் கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை வரைபடமாக்கவோ அல்லது ஆவணப்படுத்தவோ தவறிவிட்டன. சட்ட ஆவணங்கள் இல்லாத நிலையானது இந்தப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களை முறையான பதிவுகள் இல்லாதவர்களாகச ஆக்கியுள்ளது. இது அவர்கள் தங்கள் வீடுகளை மேம்படுத்த நிறுவன கடன் பெற அணுகுவதையோ அல்லது கடன்கள் மற்றும் பிற நிதி உதவிகளுக்கான அடமான சொத்தாக தங்கள் சொத்துக்களை பயன்படுத்துவதையோ தடுக்கிறது. பொருளாதார அதிகாரமளித்தலுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சொத்து ஆவணங்களின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்வமித்வா திட்டம் உருவாக்கப்ப ட்டது.
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் இதுவரை 3.17 லட்சம் கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு, லடாக், தில்லி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களிலும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இதுவரை, 1.49 லட்சம் கிராமங்களுக்கு, 2.19 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹரியானா, உத்தராகண்ட், திரிபுரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரியிலும், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் அனைத்து கிராமங்களின் சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088066
***
TS/SMB/DL
(Release ID: 2088191)
Visitor Counter : 64