உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டில் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் – மத்திய உள்ளதுறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

Posted On: 24 DEC 2024 7:09PM by PIB Chennai

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தப்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறைச் செயலாளர், உத்தராகண்ட்  தலைமைச் செயலாளர், உத்தரகண்ட் காவல்துறை தலைவர்  உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் சிவில் உரிமைகளின் பாதுகாவல் அம்சங்களாக  உள்ளன என்றார். புதிய குற்றவியல் சட்டங்களை மாநிலத்தில் 100 சதவீதம் விரைவில் அமல்படுத்துமாறு உத்தராகண்ட் முதலமைச்சர் திரு. புஷ்கர் சிங் தாமியை உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

புதிய சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் மையமாகக் கொண்டவையாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்று புதிய சட்டங்களை உத்தராகண்டில் அமல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறையும், தலைமைச் செயலாளரும் டிஜிபியும் வாரத்திற்கு ஒரு முறையும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகளுடனும் ஆய்வு செய்ய வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

----

TS/PLM/KPG/DL


(Release ID: 2087719) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi