இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் 'நல் ஆளுகை' நடைப்பயணம்'
प्रविष्टि तिथि:
24 DEC 2024 2:05PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும்வ கையில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத்தின் வாட்நகரில் 2024 டிசம்பர் 24, அன்று 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'நல் ஆளுகை நடைபயணத்திற்கு' ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும், மைபாரத் தன்னார்வலர்களும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அங்கு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 15,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் பிறந்த நாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார். இனி ஒவ்வொரு மாதமும் இரண்டு இடங்களில் இதுபோன்ற நடைப்பயணங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மை பாரத் திட்டம் இளைஞர்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை 1.65 கோடி இளைஞர்கள் மை பாரத் தளத்தில் இணைந்துள்ளதாகவும் திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
----
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2087672)
आगंतुक पटल : 84