மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இந்தியாவில் ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் குறித்த பயிலரங்கு - பிகானிரில் நடைபெற்றது
Posted On:
21 DEC 2024 1:23PM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் சபை 2024-ம் ஆண்டை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண் அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நேற்று (20 டிசம்பர் 2024 வெள்ளிக்கிழமை) ராஜஸ்தானின் பிகானிரில் 'இந்தியாவில் ஒட்டகப் பால் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல்' குறித்த ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன.
ஒட்டக பால் மதிப்புச் சங்கிலியின் நிலையான வளர்ச்சியில் உள்ள சவால்களைத் எதிர்கொள்ள பல்வேறு தரப்பினரிடையே உரையாடலைத் தூண்டுவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டு அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் ஒட்டக வளர்ப்பாளர்கள், அரசு அதிகாரிகள், சமூக நிறுவனங்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பால்வள ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகள், அமுல் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் மாடு அல்லாத பால் துறை குறிப்பாக ஒட்டகப் பால் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் கண்டு, ஒட்டக வளர்ப்பாளர்களின் மேம்பாட்டுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் அல்கா உபாத்யாயா இதில் பேசுகையில், இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து எடுத்துரைத்தார். நிலையான மேய்ச்சல் நிலங்களை உறுதி செய்வதிலும், ஒட்டக வளர்ப்பு சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும் தேசிய கால்நடை இயக்கத்தின் பங்கை அவர் விளக்கினார். ஒட்டகங்களின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஒரு வலுவான ஒட்டக பால் மதிப்புச் சங்கிலியின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
*****
PLM/KV
(Release ID: 2086768)