தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் பாரத்நெட்

Posted On: 21 DEC 2024 9:55AM by PIB Chennai

 

பாரத்நெட் அறிமுகம்:

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் பயன்பாடுகளும் அதிகரித்து வரும் உலகில், இணைய இணைப்பு பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், ஆளுகை ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய அம்சமாக அந்த டிஜிட்டல் அம்சங்கள் மாறியுள்ளன. இதில் டிஜிட்டல் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இது அதிகமாக இருந்தது. இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு அக்டோபர் 2011-ல் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் குறைந்த செலவில் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய திட்டமாகும். தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த முன்முயற்சி, கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகர்ப்புற - கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் முயல்கிறது. பாரத்நெட் என்பது வெறும் உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல. இது உண்மையான டிஜிட்டல் தேசத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் முதுகெலும்பாகும்.

திருத்தப்பட்ட பாரத்நெட் 2023:

ஆகஸ்ட் 2023-ல் , திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு (ABP) அரசு ஒப்புதல் அளித்தது. 2.64 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை (OF) இணைப்பு மூலம் இணைய அணுகலை இந்தத் திட்டம் வழங்குகிறது. மேலும் கிராம பஞ்சாயத்து அல்லாத மீதமுள்ள கிராமங்களுக்கு (உத்தேசமாக 3.8 லட்சம்) தேவையின் அடிப்படையில் கண்ணாடி இழை இணைப்பை வழங்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. ரூ.1,39,579 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா நிதியம்

டிஜிட்டல் பாரத் நிதியம் (டிபிஎன்) என்பது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம், அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியமாகும் . இது யுனிவர்சல் சர்வீஸ் ஒபிளிகேஷன் ஃபண்டுக்கு (யுஎஸ்ஓஎஃப்) மாற்றாக இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.

இதன் குறிக்கோள்கள்:

*கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் மலிவு மற்றும் உயர்தர மொபைல், டிஜிட்டல் சேவைகளை வழங்குதல்

*அறிவு, தகவலுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல்

*டிஜிட்டல் இணைப்பு, சேவைகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்

*டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, அணுகலுக்கான தடைகளை அகற்றவும்

பாரத்நெட்டின் செயல்பாடு

பாரத்நெட் உலகின் மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டமாக செயல்படுகிறது. இத்திட்டம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL ) என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் 25.02.2012 அன்று இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30.04.2016 அன்று, தொலைத் தொடர்பு ஆணையம் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.

கட்டம் 1: தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க கண்ணாடௌ கேபிள்களை அமைப்பதில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 2017-ல் இது நிறைவடைந்தது.

இரண்டாம் கட்டம்: கண்ணாடி இழை, ரேடியோ, செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதலாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த கட்டம் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது.

கட்டம் 3: 5ஜி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலைவரிசை திறனை அதிகரிப்பதன் மூலமும், வலுவான கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதன் மூலமும் நெட்வொர்க்கை எதிர்காலத்தில் சரிசெய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுகல் தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது .

பாரத்நெட்டின் தாக்கம்:

பாரத்நெட் கிராமப்புற இந்தியாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது.

 

இந்தத் திட்டம் தொலைதூர கிராமங்களை அதிவேக இணையத்துடன் இணைத்து, மின்-ஆளுமை சேவைகள், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் ஆகியவற்றை அணுக உதவுகிறது.

இந்தியாவில் இணைய உள்ளடக்கம்:

இந்தியாவில் இணைய இணைப்பை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அக்டோபர், 2024 நிலவரப்படி:

*783 மாவட்டங்களில் உள்ள 4ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை 24,96,644 எட்டியுள்ளது .

*779 மாவட்டங்களில் 4,62,084 பிடிஎஸ் நிறுவப்பட்டதன் மூலம் உலகில் 5G சேவைகளை இந்தியா மிக வேகமாக செயல்படுத்தியுள்ளது .

*டேட்டாவின் விலை மார்ச் 2014-ல் ஒரு ஜிபி ரூ. 269 லிருந்து (மார்ச் 2014-ல்), தற்போது ரூ .9.08 ஆக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

*சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகம் மார்ச் 2014-ல் 1.30 எம்பிபிஎஸ் ஆக இருந்த்து. தற்போது 95.67 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது.

*நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,15,836 கிராமங்களில் 4ஜி மொபைல் இணைப்பு உள்ளது .

கிராமப்புற இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதற்கான இலக்கை பாரத்நெட் கொண்டுள்ளது. பரந்த வாய்ப்புகளுடன் இணைய விரும்பும் லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு இது ஒரு உயிர்நாடியாக திகழ்கிறது. வலுவான செயலாக்கம், தொடர்ச்சியான முயற்சிகளுடன், பாரத்நெட் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, பாரத்நெட் திட்டத்தின் இணைய சக்தி இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் மேம்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AS329_R1XIRX.pdf?source=pqals

https://usof.gov.in/en/usof-dashboard

https://usof.gov.in/en/home

https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151993&ModuleId=3&reg=3&lang=1

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2077908

https://usof.gov.in/en/bharatnet-project

https://bbnl.nic.in/

*****

PLM/KV

 

 

 


(Release ID: 2086740) Visitor Counter : 29


Read this release in: English , Urdu , Hindi , Manipuri