அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"மருத்துவமனை நிர்வாக தகைசால் விருதுகளை" டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வழங்கினார்,

Posted On: 20 DEC 2024 4:58PM by PIB Chennai

புகழ்பெற்ற மருத்துவமனை நிர்வாகிகளுக்கு "மருத்துவமனை நிர்வாக தகைசால் விருதுகளை" மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வழங்கினார்.  மருத்துவ பராமரிப்பு மற்றும் கவனிப்பை ஒருங்கிணைப்பதில் இவர்களின் பங்களிப்பை அமைச்சர் வலியுறுத்தினார்.

சுகாதார நிறுவனங்களில் புரட்சியை ஏற்படுத்துவதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கினை மருத்துவமனை நிர்வாக தகைசால் விருதுகளின் மூன்றாவது பதிப்பில் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். நோயாளி பராமரிப்பு, செயல்திறன், சிகிச்சை அளிப்பதில் புதுமை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சுகாதார நிர்வாகிகள் மற்றும் நிறுவனங்களின் சாதனைகள் இந்த நிகழ்வில் பாராட்டப்பட்டன.

மருத்துவமனை  நிர்வாகிகளின் பங்களிப்புகளைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுகாதார அமைப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்பவர்கள் என்று அவர்களை வர்ணித்தார். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அறிவியல், தொழில்நுட்பத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்பை அவர் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மருத்துவமனை நடைமுறைகளை எவ்வாறு மாற்றியமைத்துள்ளன என்பது பற்றி குறிப்பிட்ட அவர், நவீன சுகாதார சேவையின் முதுகெலும்பாக அறிவியலும், தொழில்நுட்பமும் திகழ்கின்றன என்றார்.

தனியார் துறைக்கும் பொதுத்துறைக்கும் இடையிலான முந்தைய எல்லைக்கோடு இப்போது  இல்லை என்பதை மத்திய அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். இது ஒருங்கிணைந்த சூழலுக்கு வழிவகுக்கிறதுகுடிமக்களுக்கு சிறந்த சுகாதாரத்திற்கான பாதையை அமைத்து தருகிறது என்றும் அவர் கூறினார்.

சுகாதார கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை டாக்டர் ஜிதேந்திர சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார். விருது வழங்கும் விழா அறிவியல், தொழில்நுட்பம்சுகாதார நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையேயான இன்றியமையாத ஒருங்கிணைப்பை  எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள சுகாதார அமைப்பு குறித்த அரசின் பார்வையை வலுப்படுத்துகிறது. தொடர்ச்சியான புதுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம், சமமான சுகாதார சேவையை வழங்குவதில் புதிய மைல்கற்களை எட்ட இந்தியா தயாராக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

வாழ்நாள் சாதனைக்காக பீஷ்மர், உத்திசார்  சிறப்புக்காக சாணக்யா போன்ற புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் பெயரிடப்பட்ட இந்த விருதுகள், சுகாதார நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக   வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086518

***

 

TS/SMB/RJ/DL


(Release ID: 2086624) Visitor Counter : 9


Read this release in: English , Urdu , Hindi