சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த அண்மைத் தகவல்
Posted On:
20 DEC 2024 4:52PM by PIB Chennai
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 இன்படி, (2019-21) நாட்டின் மொத்த கருத்தரிப்பு விகிதம் 2.0-ஐ எட்டியுள்ளது. இது தேசிய மக்கள் தொகை கொள்கை - 2,000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை 2017 ஆகியவற்றுடன் இசைவானதாக்கப்பட்டுள்ளது. கருத்தரிப்புக்கான சரியான காலம், இரண்டு கர்ப்பங்களுக்கிடையே போதுமான கால இடைவெளி விடுதல், குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல், மாநிலங்கள் முன்வைக்கும் கருத்தரித்தலை நிர்வகிப்பதற்கான திட்டங்களின் பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு கருத்தரித்தல் விகிதத்தை மாற்றீடு நிலையில் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
தேசிய குடும்ப நலத் திட்டம், பொது ஆய்வுக் குழு, தேசிய திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், மாநில/ மண்டல/ தேசிய அளவிலான ஆய்வுக் கூட்டங்கள், கள கண்காணிப்பு வருகைகள் மற்றும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ஆகியவற்றின் மூலம் இந்த திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல்மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086511
***
TS/SV/RJ/DL
(Release ID: 2086609)
Visitor Counter : 12