இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2024 5:51PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 2024 ஜூன் 5 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
16/12/2024 நிலவரப்படி, அரசு நிறுவனங்கள், கிராம அளவிலான அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள், மாணவர்கள், பிற தரப்பினரின் பங்கேற்புடன் இந்த இயக்கத்தின் கீழ் 102.82 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்த இயக்கம் மரக்கன்றுகள் நடுவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், அவற்றைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் மக்களுக்கு உணர்த்துகிறது. இந்த இயக்கம் உள்நாட்டு மர இனங்களை நடுவது, மரங்களின் உயிர்வாழ்வை மேம்படுத்த உதவுவது என்பதோடு மட்டுமல்லாமல், தோட்டப் பகுதிகளில் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறது. நடப்பட்ட மரக்கன்றுகளின் பராமரிப்பில் பொதுமக்கள் பங்கேற்பானது தன்னார்வம் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது .
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம்,பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL