பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள்
Posted On:
19 DEC 2024 4:38PM by PIB Chennai
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கான (சிபிஜிஆர்ஏஎம்எஸ்) 10 சீர்திருத்தங்கள் அரசால் ஏப்ரல் 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டன. குடிமக்களின் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் திறம்பட தீர்த்து வைக்கவும் மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதை மேம்படுத்தவும் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2022, 2023, 2024 வரை மூன்று ஆண்டுகளில் இந்த சீர்திருத்தங்கள் சுமார் 70,03,533 குறைகளைத் தீர்க்க உதவியுள்ளன. குறை தீர்ப்பதற்கான காலக்கெடுவை 2019-ல் 28 நாட்களில் இருந்து 2024-ல் 13 நாட்களாகக் குறைத்தது.
10 நிலை சீர்திருத்தங்கள் (i) சிபிஜிஆர்ஏஎம்எஸ் 7.0-ஐ உலகமயமாக்குதல், (ii) தொழில்நுட்ப மேம்பாடுகள், (iii) மொழிபெயர்ப்பு, (iv) குறை தீர்க்கும் மதிப்பீட்டுக் குறியீடு (GRAI) (v) பின்னூட்ட அழைப்புகள் மூலம் மக்களை ஈடுபடுத்துதல் (vi) ஒரே நாடு ஒரே இணையதளம், (vii) உள்ளடக்கம், மக்கள் தொடர்பு (viii) பயிற்சி, திறன் மேம்பாடு, (ix) மாதாந்திர மதிப்பாய்வுகள், அறிக்கைகள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்துதல் (x) தரவு பிரிவை செயல்படுத்துதல்.
சிபிஜிஆர்ஏஎம்எஸ் ஆரம்பகால டிஜிட்டல் தளங்களில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் நடைமுறைகளைப் பயன்படுத்தி, விரிவான தரவு பகுப்பாய்வை இந்த தளம் மேற்கொள்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2086225)