உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
தொழில்முனைவோரை மேம்படுத்துதல்: உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கான மானியங்கள்
Posted On:
19 DEC 2024 3:35PM by PIB Chennai
உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகம் அதன் மத்திய துறை திட்டங்களான பிரதமரின் உழவர் மேம்பாட்டுத் திட்டம், உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் ஆகியவற்றின் மூலம் உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதையும், அதனை விரிவாக்குவதையும் ஊக்குவிக்கிறது. நாடு முழுவதும் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.
இந்தத் தகவலை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085998
***
TS/PKV/DL
(Release ID: 2086177)
Visitor Counter : 16