சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உங்கள் நாட்டைப் பாருங்கள் பிரச்சார இயக்கம்

Posted On: 19 DEC 2024 3:48PM by PIB Chennai

நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2020 ஜனவரியில் சுற்றுலா அமைச்சகம் "நமது நாட்டைப் பாருங்கள்" என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. இந்த முன்முயற்சியின் கீழ், இணையதளம், வினாடி வினா, உறுதிமொழி, கருத்தரங்குகள், சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகள், சுற்றுப்பயணங்கள், இணையதளம், சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் சுற்றுலா அமைச்சகமானது இந்தியாவில் சுற்றுலா மேம்பட வழிவகை செய்துள்ளது.

ஆன்மீகம், இயற்கை, வனவிலங்கு, சாகசம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்பட  5 சுற்றுலா வகைகளில் மிகவும் விருப்பமான சுற்றுலா தலங்களை அடையாளம் காண மக்களுடன் ஈடுபடும் நோக்கத்துடன் சுற்றுலா அமைச்சகம் மக்கள் தேர்வு வாக்கெடுப்பை தொடங்கியுள்ளது. டிஜிட்டல், சமூக ஊடகங்கள், அச்சு, வெளிப்புற விளம்பரம், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் மக்கள் தேர்வு வாக்கெடுப்பை அமைச்சகம் விளம்பரப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பேக்கேஜ் டூர் போன்ற சுற்றுலா திட்டங்கள் தனியார் பங்குதாரர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.

இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

TS/PKV/AG/DL


(Release ID: 2086165) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi , Punjabi