பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
உயிரி எரிசக்தி பிரிவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான அரசின் கொள்கைகள்
Posted On:
19 DEC 2024 3:31PM by PIB Chennai
எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இந்தியாவில் நிலையான வளர்ச்சியை ஊக்குவகப்பதற்கும் சுத்தமான எரிசக்தி தீர்வுகளை கண்டறிவதற்கும் உயிரி எரிசக்தி மற்றும் கழிவு-எரிசக்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தேசிய உயிரி எரிசக்தி திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கூடுதலாக, உயிரி எரிபொருள் பிரிவின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், 2025-ம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்பட்ட எத்தனால் கலவையை அடையவும், அரசு, 2014 முதல், எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களை விரிவுபடுத்துதல், கரும்பு கொள்முதல் செய்வதற்கான விலை அமைப்பு முறையை நிர்வகிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதம் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு எத்தனால் வட்டி மானியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் தானிய அடிப்படையிலான எத்தனால் விநியோகத்திற்கான முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோள உற்பத்தியை ஊக்குவிக்க, பயிற்சி/விழிப்புணர்வு/வெளிப்பாடு திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் நடத்தியுள்ளது. லாபகரமான எத்தனால் உற்பத்தியை நோக்கி தரமான மக்காச்சோள உற்பத்திக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுக்கு 'எத்தனால் தொழிற்சாலைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்துதல்' திட்டம் பற்றி விளக்கப்பட்டது.
எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024, எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோலிய செயல்பாடுகளை விரைவுபடுத்த தேவையான மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு வர ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பது உட்பட பல்வேறு நோக்கங்களை இந்த மசோதா கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடவடிக்கை காரணமாக, தோராயமாக 557 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க உதவியுள்ளது.
இந்தத் தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2086112)
Visitor Counter : 20