புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை முறைகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
Posted On:
19 DEC 2024 1:20PM by PIB Chennai
நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தை அரசு கவனத்தில் கொண்டு, அதன் தாக்கத்தை மதிப்பிடவும், குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பன்முக அணுகுமுறையானது நாட்டின் வானிலை முறைகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்களை தணிவிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம்: இது 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்யும் அதே நேரத்தில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. சூரிய சக்தி, எரிசக்தி திறன், நிலையான வேளாண்மை, நீர் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியா தனது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் பேரழிவை எதிர்கொள்ளும் தயார்நிலையை பலப்படுத்தியுள்ளது, இது தீவிர வானிலை நிகழ்வுகளின் (எ.கா., சூறாவளிகள், வெப்ப அலைகள், வெள்ளம்) தாக்கங்களைக் குறைக்க இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
வறட்சியைத் தாங்கும் பயிர்கள், மேம்பட்ட நீர் மேலாண்மை மற்றும் மாறும் மழை, வெப்பநிலை முறைகளுக்கு ஏற்ப பயிர் முறைகளில் மாற்றங்கள் போன்ற பருவநிலை-நெகிழ்திறன் வேளாண் நடைமுறைகளை அரசு ஊக்குவித்துள்ளது.
நீர் பற்றாக்குறை குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், நிலையான நீர் பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், குறிப்பாக வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில், நீர்வள இயக்கம், தேசிய நீர் இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
------
(Release ID: 2085950)
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2086107)
Visitor Counter : 39