அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: ரசாயனங்களிலும், உரங்களிலும் நானோ பூச்சுப் பொருள்கள்

Posted On: 19 DEC 2024 1:29PM by PIB Chennai

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களிலும் உரங்களிலும் ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை நனோ பூச்சுப் பொருட்கள் அதிகரிக்கின்றன. உரங்களின் நானோ பூச்சு என்பது உரத் துகள்களின் மேற்பரப்பில் நானோ அளவிலான பொருட்கள் அல்லது மெல்லிய படலங்களைப் பயன்படுத்தும் செயல்முறையாகும். இந்த அணுகுமுறை உரங்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது, ஊட்டச்சத்து இழப்பு போன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்கிறது.

இது விவசாயிகளுக்கு உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிவகைகளை வழங்குகிறது. நானோ டிஏபி அனைத்து பயிர்களுக்கும் கிடைக்கக்கூடிய நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றின் சிறந்த ஆதார வளமாக உள்ளது. இது பயிர்களில் நைட்ரஜன், பாஸ்பரஸ் குறைபாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. இது சந்தையில் கிடைக்கிறது.

ஒட்டுமொத்த பயிர் செயல்திறனை மேம்படுத்துவதற்காக உரங்கள் உள்ளிட்ட வேளாண் உள்ளீடுகளின் பண்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நானோ உயிரி தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி - மேம்பாட்டு திட்டங்களை அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2085955)

TS/PLM/AG/KR


(Release ID: 2086051) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi