சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சிஐஐ சுகாதார உச்சி மாநாடு- மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
19 DEC 2024 1:27PM by PIB Chennai
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 21-வது சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய சுகாதாரம், குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் உரையாற்றினார். "2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தின் சுகாதாரத்துறை" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர், இந்தியாவில் மருத்துவ சாதனத் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளது என்றார். இந்திய மருத்துவ சாதனங்கள் துறை சுமார் 14 பில்லியன் டாலராக உள்ளது என்றும், இது 2030-ம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பான், சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் நான்காவது பெரிய மருத்துவ சாதனங்கள் சந்தையாகவும், உலகின் முதல் 20 உலகளாவிய மருத்துவ சாதனங்கள் சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் கூறினார். மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை உருவாக்கியிருப்பது, தேசிய மருத்துவ சாதனங்கள் மேம்பாட்டு கவுன்சிலை (NMDPC) மறுசீரமைத்திருப்பது, போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்று இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2085954)
TS/PLM/AG/KR
(रिलीज़ आईडी: 2086049)
आगंतुक पटल : 78