அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை

Posted On: 19 DEC 2024 1:32PM by PIB Chennai

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக 'விரைவுபடுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை' –யை  அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை  அறிமுகப்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சித்திறனை ஊக்குவிக்கும் பல் நிறுவனம் சார்ந்த திட்டமாக இது உள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தை புரவலர் முறையில் மையம் -ஆரம் என்ற சட்டக வரைவில் ஏற்கனவே நன்கு செயல்படும் உயர்நிலை நிறுவனத்தோடு இணைத்து செயல்பட வைப்பதும் இத்திரைப்படத்தின்நோக்கமாகும். மையமாக உள்ள நிறுவனம் தொடக்க நிலையில் உள்ள நிறுவனத்துக்கு தங்கள் மூல வளங்களையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும்.இதனால் நிறுவனங்களுக்கிடையேயான இடைவெளி குறையும். மேலும் இது நாட்டில்  வலுவான ஆராய்ச்சி சூழலையும் வளர்க்கும். விரைவுபடுத்தப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டாண்மை திட்டம், நவம்பர் 14, 2024 அன்று தொடங்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை எந்தப் பல்கலைக் கழகமும்,  நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும், இத்திட்டத்தின் கீழ் இதுவரை எந்த நிதியும் வெளியிடப்படவில்லை.

இந்தத் திட்டமானது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை  மூலம் மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் திட்டமாகும். தேசிய கல்வி நிறுவன தகுதி தரவரிசை யின்படி புரவலர் நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

 இந்தத் தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர்  டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2085958)
TS/PKV/RR/KR


(Release ID: 2086048) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi