மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
சுழற்சிப் பொருளாதார இயக்கத்தில் இணையுமாறு பால் பண்ணை கூட்டமைப்புகளுக்கு கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் அழைப்பு
Posted On:
19 DEC 2024 1:14PM by PIB Chennai
நாட்டின் பால் உற்பத்தி நிலைமையை ஆய்வு செய்வதற்கான ஆய்வுக்கூட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் நடைபெற்றது. டிசம்பர் 18 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், இந்திய தேசிய கூட்டுறவு பால்வள சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை யின் அதிகாரிகள் மற்றும் மாநில கூட்டுறவு பால் சம்மேளனங்களின் பால் உற்பத்தி அலகுகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாட்டின் பால் உற்பத்தி நிலைமை மற்றும் மாநில பால் சம்மேளனங்கள் செய்து வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய செயலாளர் திருமதி.அல்கா உபாத்யாயா, 2023-24 ஆம் ஆண்டில் தோராயமாக 239.3 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்து, உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று கூறினார். நுகர்வோர் நலன்களைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதலை மேம்படுத்துவதிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையை அதிகரிப்பதிலும் பால் உற்பத்தி கூட்டமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தி நிலைமை சீராக உள்ளது என்றும், ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், பால் கொள்முதல் விலையிலும் ஆண்டுக்கு ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 2024 இல் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகியன பாலுக்கான ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் பணவீக்க விகிதத்தோடு முறையே 2.09 மற்றும் 2.85 ஆக இருந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் மதிய உணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் போன்ற திட்டங்களில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அனைத்து பால் கூட்டமைப்புகளுக்கும் செயலாளர் அறிவுறுத்தினார். இவைதான் பால் கொள்முதலைப் பொறுத்து மிகப்பெரிய நிறுவன உள்நாட்டு சந்தையாக உள்ளன.
ஆய்வுக் கூட்டத்தின்போது, சுழற்சிப் பொருளாதாரம் பற்றிய விளக்கக்காட்சி காட்டப்பட்டது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் 3 உயிரி- வாயு உற்பத்தி மாதிரிகளை எடுத்துக்காட்டி விளக்கமளித்தது. உயிரி -வாயு உற்பத்தியானது சுழற்சி பொருளாதாரத்துக்கு உந்துதலாக இருப்பதோடு நீடித்த பசுமை எரிபொருள் ஆற்றலுக்கும் இயற்கை உரங்கள் தயாரிப்புக்கும் உதவும். 19 மாநிலங்களில் 27000 வீடுகளில் உயிரி- வாயு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. 1040 விவசாயிகள் 11 ஆயிரம் கார்பன் கிரெடிட்களை ஈட்டி உள்ளனர்.
பால் உற்பத்தித் துறையில் சுழற்சிப் பொருளாதாரத்தில் செயல்படவும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் கலந்தாலோசித்து பலன்களைப் பெறுவதில் முனைப்புடன் ஈடுபடவும் பால் கூட்டமைப்புகளுக்கு செயலாளர் அறிவுறுத்தினார். பால்வளத் துறையில் சுழற்சிப் பொருளாதாரம் தொடர்பாக நிகழ இருக்கும் கருத்தரங்கில் ஒவ்வொரு மாநிலமும் உயிரிவாயுவில்(பயோ கேஸ்) குறைந்தது ஒரு திட்டத்தையாவது வகுத்து வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது பால் உற்பத்தித் துறையின் மூலம் வெளியாகும் கார்பன் அளவைக் குறைப்பதற்கும் அதே நேரத்தில் பால் பண்ணையாளர்களின் வருவாயை அதிகரிப்பதற்கும் உதவும். பால் மதிப்புச் சங்கிலியில் நீரின் பயன்பாடு மற்றும் அதன் திறன்மிக்க பயன்பாட்டை உறுதி செய்வதற்கான அணுகுமுறைகள் ஆகியவையும் கலந்துரையாடலில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
பால் உற்பத்தித் தொழிலில் செயல்திறனைக் கொண்டு வருவதற்கும், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும், தொழில்துறையின் கார்பன் தடத்தைக் குறைப்பதற்கும் தரப்படுத்தலின் அவசியம் குறித்த கருத்துகளுடன் கூட்டத்தை செயலாளர் நிறைவு செய்தார். இந்தியாவில் பால் உற்பத்தியாளர்களின் சமூகப், பொருளாதார நிலையை மேம்படுத்த, பால் கொள்முதலை மேம்படுத்தவும், அமைப்புத் துறையில் அதிக பாலைக் கொண்டு வரவும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதை துரிதப்படுத்தவும் பால் கூட்டமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
***
(Release ID: 2085946)
TS/PKV/RR
(Release ID: 2085976)
Visitor Counter : 24