பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 2024 நவம்பர் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 28-வது அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டது
Posted On:
18 DEC 2024 4:42PM by PIB Chennai
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 2024 நவம்பர் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் 28-வது அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுமக்கள் குறைகளின் வகைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இவை தீர்க்கப்படும் தன்மை ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
2024 நவம்பரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 56,650 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன. 2024, நவம்பர் 30 நிலவரப்படி மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் போர்ட்டலில் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளில் 1,92,012 குறைகள் நிலுவையில் உள்ளன.
இந்தப் போர்ட்டலில் 2024 நவம்பர் மாதத்தில் மொத்தம் 39,999 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர், அதிகபட்ச பதிவுகள் உத்தரபிரதேசத்தில் இருந்து (6,189) வந்துள்ளன.
2024 நவம்பரில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த மாநில வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு பொது சேவை மைய வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதத்தில் பொது சேவை மையங்கள் மூலம் 6,537 குறைகள் பதிவு செய்யப்பட்டன, இதில் அதிகபட்ச குறைகள் உத்தரபிரதேசத்திலிருந்தும் (1,469 குறைகள்) ஒடிசாவிலிருந்தும் (1,444 குறைகள்) பதிவு செய்யப்பட்டன.
2024 நவம்பரில், பின்னூட்ட அழைப்பு மையம் 55,206 பின்னூட்டங்களை சேகரித்தது. சேகரிக்கப்பட்ட மொத்த பின்னூட்டங்களில், 44% மக்கள் குறைகளுக்கு வழங்கப்பட்ட தீர்வில் திருப்தி தெரிவித்தனர். 2024 நவம்பரில், பின்னூட்ட அழைப்பு மையத்தால் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்காக 22,319 பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பின்னூட்டங்களில், 35% மக்கள் வழங்கப்பட்ட தீர்வில் திருப்தி தெரிவித்தனர்.
2024 நவம்பரில் உத்தரப்பிரதேசம் அதிகபட்சமாக 20,250 குறைகளைப் பெற்றுள்ளது. 2024 நவம்பர் மாதத்தில் 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1,000-க்கும் மேற்பட்ட குறைகளைப் பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் 2024 நவம்பரில் அதிகபட்சமாக முறையே 20,255 மற்றும் 4,494 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன.
2022-23 நிதியாண்டு மற்றும் 2023-24 நிதியாண்டில் சேவோட்டம் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட மானியங்களின் நிலையும் இந்த அறிக்கையில் அடங்கும். கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2022-23, 2023-24, 2024-25), 616 பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்துள்ளன. இவற்றில் ~20,017 அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085649
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2085854)
Visitor Counter : 14