உள்துறை அமைச்சகம்
டிஎன்ஏ, உள்ளுறுப்பு ஆய்வு அறிக்கைகளை வழங்க தடயவியல் ஆய்வகங்கள் எடுத்துக்கொள்ளும் கால அளவு
प्रविष्टि तिथि:
18 DEC 2024 5:16PM by PIB Chennai
தடயவியல் பகுப்பாய்வை விரைவுபடுத்தவும், ஆய்வகங்களில் தேக்கங்களைக் குறைக்கவும், நாட்டில் தடயவியல் திறன்களை வலுப்படுத்த உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போபால், குவஹாத்தி, புனே ஆகிய இடங்களில் 3 புதிய மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் மையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
புதிய தடய அறிவியல் பிரிவுகள் உட்பட 7 மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன மரபணு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 117 தடய அறிவியல் ஆய்வகங்களை (மத்திய மற்றும் மாநில) இணைக்கும் மின்னணு தடய அறிவியல் தகவல் தொழில்நுட்ப தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மாநில தடய அறிவியல் ஆய்வகங்களில் மரபணு பகுப்பாய்வு மற்றும் இணைய தடய அறிவியல் திறன்களை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் (30) ரூ.245.29 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.185.28 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085694
***
TS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2085853)
आगंतुक पटल : 57