நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது

Posted On: 18 DEC 2024 6:13PM by PIB Chennai

இளைஞர்களிடையே ஜனநாயக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காகநாடாளுமன்ற விவகார அமைச்சகம் 1966-67 முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக பின்வரும் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை அந்தந்தப்  பங்குதாரர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்துகிறது.

தேசிய தலைநகர் தில்லிப் பிரதேச கல்வி இயக்குநரகம் மற்றும் புது தில்லி மாநகராட்சியின் கல்வித் துறை கீழ் உள்ள பள்ளிகளுக்கான இளைஞர் நாடாளுமன்றப் போட்டி;

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்ற போட்டி;

ஜவஹர் நவோதயா பள்ளிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி;

பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டி;

இவை தவிர, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இளைஞர் நாடாளுமன்ற போட்டிகளை நடத்த பின்வரும் வரம்புகளின்படி நாடாளுமன்ற விவகார அமைச்சகம்  நிதி உதவி அளிக்கிறது. போட்டி முடிந்தவுடன் பெறப்படும் கோரிக்கைகளுக்கு உட்பட்டது.

100 வரை உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.3 லட்சம்; 100க்கும் 200- க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.4 லட்சம்; 200க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றங்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு சட்டமன்றத்திற்கு ரூ.5 லட்சம் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.

இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085744

***

 

TS/SMB/RJ/DL


(Release ID: 2085852) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi