பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை நல்லாட்சி வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது

Posted On: 18 DEC 2024 5:03PM by PIB Chennai

பொது குறைகளைத் தீர்ப்பதற்கும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாடு தழுவிய நல்லாட்சி வாரம் பிரச்சாரம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும்.

நல்லாட்சி வாரம் குறித்த தமது செய்தியில், "நல்லாட்சி வாரத்தின் முக்கிய அம்சமாக 'கிராமங்களை நோக்கி நிர்வாகம்' என்ற பிரச்சாரம் தொடர்ந்து இருந்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 'கிராமங்களை நோக்கி நிர்வாகம்' என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, திறமையான நிர்வாகத்தை கிராமப்புற மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட மாற்றத்திற்கான முயற்சி. மக்களை வளர்ச்சி சென்றடைவதுதான் அடிமட்ட ஜனநாயகத்தின் உண்மையான சாராம்சம் ஆகும்" என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சாரம் 19 முதல் 24வரை 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறும். மெய்நிகர் வெளியீட்டு விழாவில் அனைத்து தலைமைச் செயலாளர்கள், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நல்லாட்சி நடைமுறைகள் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒரு பிரத்யேக வலைதளம், https://darpgapps.nic.in/GGW24, டிசம்பர் 10-ம் தேதி முதல்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது. டிசம்பர் 19 முதல் 24, 2024 வரை 'கிராமங்களை நோக்கி நிர்வாகம்' என்ற பிரச்சாரத்தின் போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்கும்:

நல்லாட்சி வாரம் 2024-ன் ஒரு பகுதியாக, புதுதில்லி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. 23.12.2024 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஒரு தேசிய அளவிலான பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

TS/PKV/RR/DL


(Release ID: 2085849) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi