தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிக ஊதியத்தில் இருந்தோரின் ஓய்வூதியத்திற்காக நிலுவையில் உள்ள 3.1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தொடர்பாக ஊதிய விவரங்கள் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளர்களுக்கு 2025 ஜனவரி 31 வரை இபிஎஃப்ஓ இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது

Posted On: 18 DEC 2024 11:56AM by PIB Chennai

அதிக ஊதியத்தில் இருந்தவர்களின் ஓய்வூதியத்திற்கான விருப்பங்கள் / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இபிஎஃப்ஓ  மூலம் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. 04.11.2022 தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தகுதியான ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்களுக்கு இந்த வசதி இருந்தது. இந்த வசதி 26.02.2023 அன்று தொடங்கப்பட்டு  03.05.2023 வரை மட்டுமே இருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஊழியர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தகுதியான ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முழுமையான நான்கு மாத அவகாசத்தை வழங்குவதற்காக கால வரம்பு 26.06.2023 வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும், தகுதியான ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்க 15 நாட்கள் கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஊழியர்கள் விருப்பத்தேர்வு / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 11.07.2023 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து 11.07.2023 வரை ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பிக்கும் ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்களின் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு நிறுவன உரிமையாளர்கள்  மற்றும் அவர்களின் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு,  ஊதிய விவரங்கள் முதலியவற்றை ஆன்லைனில் சமர்ப்பிக்க முதலில் 30.09.2023 வரையும், பின்னர்  31.12.2023 வரையும், அதன் பின்னர் 31.05.2024 வரையும் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

பல நீட்டிப்புகள் வழங்கப்பட்டபோதும், 3.1 லட்சத்துக்கும் அதிகமான விருப்பங்கள் / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்னும் நிறுவன உரிமையாளர்களிடம் நிலுவையில் உள்ளன. விண்ணப்பிக்கும் ஓய்வூதியதாரர்கள் / உறுப்பினர்களின் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு நிறுவன உரிமையாளர்கள்  மற்றும் அவர்களின் சங்கங்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிறுவன உரிமையாளர்கள் பரிசீலித்து பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய 31.01.2025 வரை நிறுவன உரிமையாளர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இபிஎஃப்ஓ மூலம்  பெறப்பட்ட மற்றும் ஆய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக இபிஎஃப்ஓ இடம்  கூடுதல் தகவல் / விளக்கம் கோரிய 4.66 லட்சத்துக்கும் அதிகமான  நேர்வுகளில், 15.01.2025 க்குள் பதில்களை சமர்ப்பிக்குமாறு / தகவல்களை புதுப்பிக்குமாறு  நிறுவன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085518

***

 

TS/SMB/RJ/KR/DL


(Release ID: 2085835) Visitor Counter : 40