புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை இயக்கத்தின் நோக்கங்கள்
Posted On:
18 DEC 2024 5:09PM by PIB Chennai
வானிலை இயக்கம் இந்தியாவின் வானிலை, பருவநிலை தொடர்பான அறிவியல், ஆராய்ச்சி, சேவைகளை மிகப்பெரிய அளவில் ஊக்குவிப்பதற்கான பன்முக முயற்சியாக இருக்கும். தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும். வானிலை இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் சில:
- அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வானிலையில் இருந்து உயிர்கள், சொத்துக்களை பாதுகாப்பதற்கான, திறன்களை வலுப்படுத்துதல்
- சமூக நலனுக்காக அறிவியல், தொழில்நுட்ப, தரவு அறிவியல் தொடர்பான அம்சங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்
- பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக தரவு ஒருங்கிணைப்பு
- புவி அமைப்பு அறிவியலில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல்
- முன்னறிவிப்புகள் மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை
இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் மத்திய துறை திட்டமான வானிலை இயக்கம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வானிலை இயக்கத்தின் செயல்பாட்டுக் காலம் 2024-2026 வரையிலான இரண்டு ஆண்டுகளாகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2085797)
Visitor Counter : 16