சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி:- பாரத்மாலா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள்
Posted On:
18 DEC 2024 1:58PM by PIB Chennai
நாட்டில் போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், இணைப்பை மேம்படுத்தவும் 34,800 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய பாரத்மாலா பரியோஜனா திட்டத்திற்கு 2017-ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 31.10.2024 நிலவரப்படி, மொத்தம் 26,425 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 18,714 கிலோ மீட்டர் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 30.11.2024 வரை ரூ.4.72 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
துறைமுகம், கடலோர இணைப்புச் சாலைகள் பிரிவின் கீழ் 189 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு கடலோர மாநிலங்களில் உள்ள பெரிய, சிறு துறைமுகங்களுக்கு இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் 1476 கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் 1185 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டுமான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2085778)
Visitor Counter : 20