பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களின் பாதுகாப்பு, பாதுகாவல், அதிகாரமளித்தலை மேம்படுத்த அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள்

Posted On: 18 DEC 2024 3:54PM by PIB Chennai

'காவல்துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநிலங்களின் பொறுப்பாகும். மேலும் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்தல், மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளன; இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

2022-ம் ஆண்டு வரை அதன் இணையதளமான https://ncrb.gov.in/en/crime-india-ல் கிடைக்கும் தேசிய குற்றப் பதிவேடு அலுவலகத்தின் தரவுகளின்படி, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை முறையே 428278 மற்றும் 445256 ஆகும். கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கான உதவி எண் -181 மற்றும் அவசரகால உதவி எண் -112 போன்ற உதவி எண்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வே அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் பதிவு ஆவதற்கு காரணமாக இருக்கலாம்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085607

***

TS/PKV/RR/DL


(Release ID: 2085777) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi