பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
Posted On:
18 DEC 2024 3:55PM by PIB Chennai
சுகாதாரம் என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அடிப்படை கண்ணியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியா உட்பட திறந்தவெளி கழிப்பிடம் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் ஒரு பொதுவான சவாலாக நீடித்து வருகிறது. வீட்டுக் கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தேவையற்ற நேரங்களிலோ அல்லது இரவு நேரத்திலோ இந்தக் காரணத்திற்காக வெளியே செல்லும் போது பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
மேலும், சானிட்டரி நாப்கின்கள் விலை அதிகமாக உள்ளதால் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மோசமாக பாதிக்கப்படுகிறது.
மேலும், பல சமூகங்களின் பாரம்பரிய ஆணாதிக்க இயல்பு காரணமாக, கழிப்பறைகளை சுத்தம் செய்வது ஒரு "அசுத்தமான" வேலையாக பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் வீட்டின் பெண்களால் செய்யப்படுகிறது.
பராமரிப்புச் சுமைகளாலும், பணிச்சுமையாலும், மகளிருக்கு குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றுவதற்கும் நேரம் கிடைப்பதில்லை என்பதை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது.
மேற்கண்ட சமூக விதிமுறைகளைக் கருத்தில் கொண்டும், பெண்களுக்கு ஏற்படும் சமமற்ற நிதி தாக்கங்களைக் கருத்தில் கொண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் முன்னோடித் திட்டமான பாலின அடிப்படையிலான சமூக நெறிமுறைகளில் மனப்பான்மை மாற்றத்தின் மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 11.64 கோடி வீட்டு கழிப்பறைகள் கட்டியதன் மூலம் பாதுகாப்பான சுகாதாரத்திற்கான அணுகல், 15.13 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்புகளுக்கான அணுகல் மற்றும் 10.3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம், பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் பெண்களின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக மாறாது என்பதை இந்திய அரசு உறுதி செய்கிறது. இது பெண்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான சாத்தியமான அச்சுறுத்தல்களை நீக்கியுள்ளது,
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/RR/DL
(Release ID: 2085774)
Visitor Counter : 18