சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

Posted On: 18 DEC 2024 1:59PM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் "இந்தியாவில் சாலை விபத்துகள்" குறித்த வருடாந்திர அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது.

2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம்  4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டில்  64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, அதிக வேகம், மொபைல் போன் பயன்பாடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், விதிகளைப் பின்பற்றாமல் தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தாமை, வாகனங்களின் மோசமான நிலை, வானிலை சூழல்கள், சாலைகளில் பழுது போன்ற பல காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் சில : சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் / வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு போன்ற அனைத்து நிலைகளிலும் மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் / வல்லுநர்கள் மூலம் சாலை பாதுகாப்பு தணிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2085552)

TS/PLM/AG/KR


(Release ID: 2085617) Visitor Counter : 41


Read this release in: English , Hindi