அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"எச்பி வைரசுக்கு எதிராக ஒன்றிணைவோம்" மாநாட்டில் கருப்பை வாய்ப் புற்றுநோயை சமாளிக்க ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்புவிடுத்தார்

Posted On: 17 DEC 2024 5:12PM by PIB Chennai

இந்தியா உருவாக்கியுள்ள கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி மலிவானதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார்.

கொவிட் நோய்த்தொற்றின் போது மிஷன் "சுரக்ஷா" -ஐ தொடங்கியதற்கும், அரசின்  தடுப்பூசி திட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கியதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இந்த மனித பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தடுப்பூசியை உருவாக்கியதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையைப் பாராட்டினார். எச்பிவி 6,11 மற்றும் 16,18 ஆகியவை பெண்களில் கருப்பை வாய்ப் புற்றுநோயுடன் நெருக்கமாக தொடர்புடையவை. இதே துறை முன்னதாக தொற்றுநோய்களின் போது கொவிட் நோய்க்கான முதல் டிஎன்ஏ தடுப்பூசியை வெளியிட்டதன் மூலம் உலக அளவில்  பாராட்டைப் பெற்றது என்று அவர் கூறினார்.

புதுதில்லியில் முன்னணி தேசிய செய்தி சேனல் ஏற்பாடு செய்திருந்த "எச்பிவி-க்கு எதிராக ஒன்றிணைவோம்" என்ற தலைப்பிலான மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார்.

எச்பிவி தடுப்பூசியைப் பயன்படுத்துவதை உறுதியாக ஆதரித்த டாக்டர் ஜிதேந்திர சிங், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு டோஸ் விதிமுறைகள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மூன்று டோஸ் விதிமுறை மூலம் அதன் நிர்வாகம் எளிதானது என்றார்.

"எச்பிவி-க்கு எதிராக ஒன்றிணைவோம்" மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், தடுப்பு சுகாதாரம், பெண்கள் சுகாதாரம், உள்நாட்டு தடுப்பூசி மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வு, சுகாதார சவாலாக உள்ள கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்தில் கவனம் செலுத்தியது.

உயிரித் தொழில்நுட்பத்  துறையின் ஆதரவுடன் தடுப்பூசியின் மேம்பாடு குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவாகக் கூறினார். அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இந்தியா ஒரு கலாச்சார மாற்றத்தை கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், வலுவான சுகாதார அமைப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டிற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கு பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை தேசிய முன்னுரிமையாக அடிக்கோடிட்டுக் காட்டினார்.

எச்பிவி தடுப்பூசியை தேசிய நோய்த்தடுப்பு திட்டங்களில் ஒருங்கிணைப்பதற்கும், கருப்பை வாய்ப் புற்றுநோயை விரிவாக எதிர்த்துப் போராடுவதற்கு பல நிலை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் அழைப்பு விடுத்து மாநாடு நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085299

---- 

SMB/DL


(Release ID: 2085459) Visitor Counter : 20


Read this release in: English , Marathi , Hindi