உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோரக் காவலர்களுக்கு பயிற்சியளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

Posted On: 17 DEC 2024 2:54PM by PIB Chennai

கடலோரக் காவலர்களுக்கு பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:

குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் தேசிய கடலோரக் காவல் பயிற்சி அகாடமியை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுவரை, கடலோர காவல் / சுங்கத் துறை / எல்லைப் பாதுகாப்புப் படை / மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 1,725 பணியாளர்கள் பல்வேறு படிப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

கொச்சியில் உள்ள கடலோர காவல் பயிற்சி மையத்திலும், அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடலோரக் காவல் மாவட்ட தலைமையிடங்களிலும் கடலோர காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 13,879 கடலோர காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல் பணியாளர்களுடன் இணைந்து இந்திய கடலோரக் காவல் படையினர் கூட்டு ரோந்து பணியை மேற்கொள்கிறது.

கடலோரக் காவல் பணியாளர்களுக்கு, கடல்சார் மேலாண்மை, கடற்பயணம், படகுகளைக் கையாளுதல் போன்ற சிறப்புக் கடல்சார் பிரிவுகளில் இந்தியக் கடற்படையால் கடற்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த, கடலோரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், 204 கடலோரக் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 204 படகுகள், 37 இறங்கு தளங்கள், 284 நான்கு சக்கர வாகனங்கள், 554 இரு சக்கர வாகனங்கள், 97 சோதனைச் சாவடிகள், 58 புறக்காவல் நிலையங்கள், 30 முகாம்கள் கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 6 கடல்சார் காவல் செயல்பாட்டு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

காவல் துறையை நவீனமயமாக்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும். அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி 'காவல் துறை' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில அரசின் துறைகளாக இருந்தாலும், மாநிலங்கள் தங்கள் காவல் படைகளை நவீனப்படுத்தவும், சாதனங்களை நவீனப்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகள், "காவல்துறை நவீனமயமாக்கலுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுதல்" திட்டத்தின் கீழ் துணை புரிகின்றன.

இத்திட்டத்தின் கீழ், அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பத்திற்கான உபகரணங்கள், தகவல் தொடர்பு, பயிற்சி போன்றவற்றுக்கு மத்திய உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 63.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
 

***

PKV/AG/DL


(Release ID: 2085436) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi