எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எஃகு ஆணையத்தின் செயல்திறன்

Posted On: 17 DEC 2024 4:00PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்  முதன்மை ஒழுங்குமுறை ஆணையமாகும்.  இந்திய எஃகு ஆணையம் (செயில்), ஆலைகள் / அலகுகள் சுற்றுச்சூழல் அனுமதி, நிறுவுவதற்கான இசைவாணை, இயக்குவதற்கான இசைவாணை, கழிவுகளை (தீங்கு விளைவிக்கும் கழிவுகள், உயிரி மருத்துவக் கழிவுகள்) மேலாண்மை செய்வதற்கான அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ சான்றிதழ்கள் / அனுமதிகளில் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கி நடப்பது போன்ற சட்டரீதியான அனுமதிகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள்  இந்திய எஃகு ஆணையத்தின் சுற்றுச்சூழல் இணக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

தொழில்நுட்ப மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.  உலைகள் உட்பட அதன் ஆலைகளின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்தை வடிவமைக்கும்போது கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பங்களை இந்த ஆணையம் தேர்வு செய்கிறது.  மற்ற வசதிகளுக்கு அதிகமாக, உலைகளின் பாதுகாப்பான மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப தலையீடுகளுக்காக புகழ்பெற்ற தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆணையம் ஒத்துழைக்கிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PKV/AG/DL


(Release ID: 2085426) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi