சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திர தனுஷ் இயக்கத்தின்கீழ் 5.46 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கும், 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
Posted On:
17 DEC 2024 3:29PM by PIB Chennai
இந்திர தனுஷ் இயக்கம் என்பது ஒருங்கிணைந்த தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி இயக்கமாகும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கும்விடுபட்டவர்களுக்காகவும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் 11 வகையான தடுப்பூசிகள் இத்திட்டத்தில் செலுத்தப்படுகின்றன.
நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கத்தின் கீழ் அனைத்து கட்டங்களிலும் மொத்தம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திரதனுஷ் இயக்கம் தேசிய ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.
***
TS/IR/KV/DL
(Release ID: 2085411)
Visitor Counter : 24