விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

வேளாண் துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.122528 கோடியாக அதிகரிப்பு

Posted On: 17 DEC 2024 3:06PM by PIB Chennai

மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், தகுந்த கொள்கை நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது.  உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயமான வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வருமான ஆதரவு ஆகியவற்றுக்கான மத்திய அரசு திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக உள்ளன. பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல், பயிர்களை மாற்றி மாற்றி பயிரிடுதல், நீடித்த வேளாண்மைக்காக பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல், விவசாயிகளின் இழப்புகளை ஈடுசெய்தல் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான உத்திகளில் அடங்கும்.

இடுபொருட்களின் பயன்பாட்டை நவீனப்படுத்துதல், செலவைக் குறைத்தல், உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயகரமான லாபம், வருமான ஆதரவு, முதியோர் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் அரசு விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது. 2013-14 ம் ஆண்டில் ரூ.21933.50 கோடியாக இருந்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை, 2024-25 ம் ஆண்டில் 122528.77 கோடி ரூபாயாக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்  காப்பீட்டுத் திட்டம்மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்கள் / துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒன்றிணைத்து இரண்டு மடங்கிற்கும் மேலாக தங்கள் வருமானத்தை அதிகரித்துள்ளன. 75,000 விவசாயிகளின் வெற்றிகள் குறித்த   தொகுப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085183

***

TS/IR/KV/KR/DL


(Release ID: 2085410) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi