உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காவல் நிலையங்களுக்கு உதவி

प्रविष्टि तिथि: 17 DEC 2024 2:49PM by PIB Chennai

'இடதுசாரி தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்துக்கு' மத்திய அரசு 2015 ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இந்தக் கொள்கையானது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு மத்திய ஆயுத போலீஸ் படை பட்டாலியன்கள், பயிற்சி, மாநில காவல் படைகளை வலுப்படுத்த நிதி, உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள், உளவுத்துறை தகவல் பகிர்வு, நவீனப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றையும் வழங்குகிறது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு பலவேறு உதவிகளை வழங்குகிறது.

சிறப்புப் படைகளை வலுப்படுத்துதல், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவுகளை வலுப்படுத்துதல், மாவட்டக் காவல்துறையை பலப்படுத்துதல், நவீனப்படுத்தப்பட்ட  காவல் நிலையங்கள் கட்டுதல் ஆகிய நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட காவல் துறைக்காக ரூ.363.26 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2017-18 ம் ஆண்டு முதல் ரூ.759.51 கோடி மதிப்பில் 302 நவீனப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

***

TS/IR/KV/KR/DL


(रिलीज़ आईडी: 2085334) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी