ஜவுளித்துறை அமைச்சகம்
இயற்கை இழைநார் பயன்பாடுகள் ஜவுளித் துறையில் மேம்பாட்டிற்கு உதவும் – அமைச்சர் கிரிராஜ் சிங்
Posted On:
17 DEC 2024 11:34AM by PIB Chennai
நாட்டின் ஜவுளித் துறையை வலுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக யுனிக்லோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஜவுளித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பருத்தி உற்பத்தி, அதன் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ஜவுளித் துறையுடன் இணைந்து செயல்பட யுனிக்லோ நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. ஜவுளித் துறையில் உலகளாவிய போட்டி, ஜவுளித் துறையின் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2024 மார்ச் 31 நிலவரப்படி நாடு முழுவதும் ரூ.814 கோடி சில்லறை விற்பனையுடன், யுனிக்லோ நிறுவனம் 30% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள ஜவுளி விற்பனையில் கணிசமாக பங்கைப் பெற்றுள்ளது.
பருத்தி உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியாவில் பருத்தி உற்பத்தி 11.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் அதிக அடர்த்தி கொண்ட தரமான பருத்தி விதைகள் அகோலாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தித் திறன் ஹெக்டேர் ஒன்றுக்கு 1,500 கிலோ என்ற அளவில் உள்ளது. உயர்தர பருத்தி உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஜவுளி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085099
----
TS/SV/KPG/KR
(Release ID: 2085307)
Visitor Counter : 22