தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் முதுநிலை மாணவர்களுக்கான 4 வார குளிர்கால உள்ளகப் பயிற்சி தொடங்கியது
Posted On:
17 DEC 2024 12:53PM by PIB Chennai
முதுநிலை மாணவர்களுக்கான 4 வார கால குளிர்கால உள்ளகப் பயிற்சித் திட்டம் - 2024 ஐ தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கியது. நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் தலைவர் திருமதி விஜயபாரதி சயானி, நாட்டின் மனித உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று பயிற்சி பெறுபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைவருக்கும் சமமான உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அவர்களை ஊக்குவித்தார். உலகளாவிய தலைமைத்துவமாக மாறுவதற்கான இந்தியாவின் பாதையை எடுத்துரைத்த அவர், இந்த பயணம் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக நீதி, இரக்கம் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதும் ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.
பின்னர் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச் செயலாளர் திரு. பாரத் லால், இந்த மதிப்புமிக்க உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பாராட்டுவதாக கூறினார். மேலும் சமூகப் பிரச்சினைகள் குறித்து அதிகபட்சமாகக் கற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு கனிவுடன் பதிலளிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம், நீதி, சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய முக்கிய மதிப்புகளை ஏற்றுக்கொண்டு, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் மனித உரிமைகளையும் நிலைநிறுத்த தீவிரமாக பங்களிக்கவும் பயிற்சிப்பெறுபவர்களை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085124
***
TS/IR/KV/KR
(Release ID: 2085162)
Visitor Counter : 28