அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை நனவாக்க டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு
Posted On:
15 DEC 2024 4:45PM by PIB Chennai
அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2047-க்குள் இந்தியாவை "வளர்ச்சியடைந்த பாரதமாக " மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை நனவாக்க அனைத்து அரசுத் துறைகளையும், மத்திய மற்றும் மாநில முயற்சிகளையும் "முழு அரசு" மற்றும் "முழு அறிவியல்" அணுகுமுறையுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
புதுதில்லியில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் மாதாந்திர கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
இன்று புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டத்தின்போது, அறிவியல் முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் அந்தந்த மாநில அறிவியல் குழுக்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியலில் கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நீடித்த மற்றும் முற்போக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தற்போதைய திட்டங்களை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதிப்பதற்கும் இந்த கூட்டம் ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், மண்டல வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் தேசிய இலக்குகளுக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றில் மாநில அறிவியல் கவுன்சில்களின் முக்கிய பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அடிமட்ட கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் அறிவியல் முகமைகளிலிருந்து வெளிவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தை மூலதனமயமாக்கலின் முக்கியத்துவம் விவாதங்களின் மையமாக இருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுகாதாரம், வேளாண்மை மற்றும் பருவநிலை பின்னடைவு போன்ற துறைகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசு ஆதரவு நிறுவனங்களிடமிருந்து அதிநவீன தீர்வுகளை அளவிட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
அறிவியல் சூழலில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த அறிவியல் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசின் முன்முயற்சிகளுடன் மாநிலங்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் மற்றும் நாடு முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். "மாநில அறிவியல் கவுன்சில்கள் தொலைநோக்கை அடைவதில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நமது அறிவியல் வளங்களின் முழு திறனையும் பயன்படுத்த முடியும்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.
அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டம், ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கல் மூலம் வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய மற்றும் மாநில முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கியத்துவம், 2047 க்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அடைவதில் அறிவியலின் உருமாறும் பங்கை வலியுறுத்துகிறது. இந்த முழு அறிவியல் அணுகுமுறை தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.
மூத்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட் தலைமை தாங்கினார்.
*****
PKV/KV
(Release ID: 2084650)
Visitor Counter : 35