எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஆர்என்ஐஎல் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது
Posted On:
14 DEC 2024 7:00PM by PIB Chennai
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கற்றல், மேம்பாட்டு மையத்தின் டாக்டர் தென்னெட்டி விஸ்வநாதம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆர்ஐஎன்எல் நிறுவன இயக்குநரும் (திட்டங்கள்), கூடுதல் பொறுப்பு இயக்குநருமான (செயல்பாடுகள்) ஸ்ரீ ஏ.கே.பாக்சி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை திரு ஏ.கே.பாக்சி, ஆர்ஐஎன்எல் ஊழியர்களும் குடும்பத்தினரும் அன்றாட வாழ்க்கையில் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் நாடகங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சுமார் 3500 பேர் பல்வேறு நிகழ்ச்சிகளில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர். எஃகு நிர்வாக சங்கம், தொழிற்சங்கங்கள், எஸ்சி மற்றும் எஸ்டி சங்கம், ஓபிசி சங்கம், விஐபிஎஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஏராளமான ஊழியர்களும் ஆர்ஐஎன்எல் எரிசக்தி சேமிப்பு தின கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
----
PLM/DL
(Release ID: 2084504)
Visitor Counter : 33