உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்டார்

Posted On: 13 DEC 2024 5:45PM by PIB Chennai

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு வெளியிட்டார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் தனது 100-வது சேவையை கொண்டாடுவது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னாம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவரும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரியுமான திரு விபின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் பேசிய திரு ராம்மோகன் நாயுடு, "இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம், இங்கு நாம் நம் தேசத்தால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தைத் தொடர்கிறோம், எதிர்கால சாதனைகளுக்கு அதிலிருந்து உத்வேகம் பெறுகிறோம். இந்த விமான நிலையம் கோடிக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வரலாற்று மைல்கற்கள் மூலம் வங்காளத்திற்கும் நாட்டிற்கும் ஒரு முக்கிய நுழைவாயிலாக நின்றுள்ளது. நமது மாண்புமிகு பிரதமர் எப்போதும் 'வளர்ச்சியும் பாரம்பரியமும்' என்று மிகவும் அன்புடன் கூறுவார். எனவே இது எங்களுக்கு பெருமையான தருணம்" என்றார்.

நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொல்கத்தா விமான நிலையத்தின் 100 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து.நினைவு முத்திரை மற்றும் நாணயம் வெளியிடுதல், நவீன விமான நிலைய கட்டிடக்கலையில் பிரதிபலிக்கும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை புத்தகம் வெளியீடு, கொல்கத்தா மற்றும் வங்காள மக்கள் சம்பந்தப்பட்ட மூன்று மாத கால கொண்டாட்டங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகளை அமைச்சர் அறிவித்தார்.

உடான் திட்டத்தின் கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு குறிப்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு தனித்துவமான உடான் யாத்ரி கஃபே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கஃபே மலிவு விலையுடன் ஒரு தொகுக்கப்பட்ட மெனுவை வழங்கும், பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும். மதிப்பில் சமரசம் செய்யாமல் அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084260  

 

----

SMB/DL


(Release ID: 2084355) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi